ஆண்டுக்கு 30,000 லிட்டர் பால் சப்ளை | Yearly 30,000 liter Milk Product
ஆண்டுக்கு 30,000 லிட்டர் பால் சப்ளை | Yearly 30,000 liter Milk Product | Women Entrepreneurial Achievement | Thirupur திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பருவாய் ஊராட்சிக்கு உட்பட்ட ஆறாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி மனைவி செல்வநாயகி. இவர் கணவருடன் இணைந்து முழுநேர கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தென்னிந்திய அளவிலான பால் உற்பத்தியாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக அளவில் சிறந்த பால் உற்பத்தியாளருக்கான விருது செல்வநாயகிக்கு வழங்கப்பட்டது. மேலும் தஞ்சாவூர் வேளாண் பல்கலை சார்பில் தமிழக அளவில் சிறந்த பால் உற்பத்தியாளருக்கான விருது ஏற்கனவே இரண்டு ஆண்டுக்கு முன் செல்வநாயகிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. byte: செல்வநாயகி தொழில்முனைவோர் 00:09 - 01:31 01:45 - 02:17 மேலும் அவர் கூறுகையில், கால்நடை வளர்ப்பு தொழில்தான் எங்களது குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணம் என பெருமிதத்துடன் கூறுகிறார். byte: செல்வநாயகி தொழில்முனைவோர் 02:22 - 02:42 02:50 - 03:35 கால்நடை தீவனங்கள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஆனால் பால் கொள்முதல் விலை மட்டும் உயராமல் இருப்பதால் கால்நடைகளை மட்டுமே நம்பியுள்ளவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரம் கருதி பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வநாயகி வலியுறுத்தினார்.