பதில் சொல்; அமெரிக்கா செல்' போட்டியில் பிளஸ் 2 மாணவிகள் சாருமித்ரா, தீபிகா முதலிடம் | reply; go to America | Dinamalar Mega Quiz | cuddalore
தினமலர் புதுச்சேரி பதிப்பு சார்பில் இந்தாண்டிற்கான பதில் சொல்; அமெரிக்கா செல்மெகா வினாடி வினா போட்டி ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதன் பள்ளியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இப்போட்டிக்கான தகுதி சுற்று முதல் நிலை தேர்வு நடந்தது. இதில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகள் 500 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 16 மாணவர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடந்த தேர்வில் முதலில் பதில் சொல்லும் அணிக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. தவ அமுதன் பள்ளி பிளஸ் டூ மாணவிகள் சாருமித்ரா, தீபிகா ஆகியோர் 40 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தினர். பிளஸ் 1 மாணவி தமிழினி, பிளஸ் டூ மாணவி தன்யா ஆகியோர் அடங்கிய மற்றொரு அணி 25 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தைப் பிடித்தனர். முதலிடம் பிடித்த அணி மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடக்கும் அடுத்த சுற்றுக்கு தேர்வானது. போட்டியில் சரியான விடையளித்த மாணவர்களை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர். பள்ளி முதல்வர் புனிதவதி நன்றி கூறினார்.