அருவிகளில் குளிக்க தடை | Increase in water flow | Hogenakkal
கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு நேற்று வரை வினாடிக்கு 8000 கன அடியாக இருந்தது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 17,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி நேற்று காவிரி கரையோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் காவிரியில் கூடுதலாக நீர்வரத்து காணப்பட்டது.
ஆக 10, 2024