/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ பணம் மட்டுமே திருடு போனதால் ஊழியர்களிடம் விசாரணை| Dindigul | Police investigation
பணம் மட்டுமே திருடு போனதால் ஊழியர்களிடம் விசாரணை| Dindigul | Police investigation
திண்டுக்கல்லில் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் கடை வைத்து இருப்பவர் மணி. கடையில் டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்கிறார். ஊழியர்கள் வழக்கம் போல் இரவு கடையை அடைத்து விட்டு சென்றனர். காலையில் கடை திறக்க வந்த போது பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போகவில்லை. கல்லாவில் இருந்த 2 லட்ச ரூபாய் மட்டும் திருடு போனது தெரியவந்தது. திண்டுக்கல் வடக்கு போலீசாரிடம் மணி புகார் கூறினார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கடை ஊழியர்களிடம் விசாரணை செய்கின்றனர்.
பிப் 14, 2024