7 அடி உயரமும் 12 அடி அகலம் கொண்ட தேரில் தசாவதார தத்ரூப காட்சி
7 அடி உயரமும் 12 அடி அகலம் கொண்ட தேரில் தசாவதார தத்ரூப காட்சி | Kanchipuram | Vaikunda Perumal Temple | Tiruther Vellotam காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமி கோயிலுக்கு அறநிலைத்துறை மற்றும் உபயதாரர் நிதி உதவியுடன் 55 லட்சம் ரூபாயில் திருத்தேரும், 20 லட்ச ரூபாய் செலவில் பாதுகாப்பு கொட்டகையும் அமைக்கப்பட்டது. தேர் 27 அடி உயரமும், 12 அடி அகலம் கொண்டது. தேரில் தசாவதாரங்கள் மற்றும் பல்வேறு தெய்வத்திரு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை திருத்தேர் குடமுழுக்கு மற்றும் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரை அறநிலைத்துறை உதவி கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் இணை கமிஷனர் குமார துறை உள்ளிட்டோர் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் அருள்மிகு கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மதுரமங்கலத்தில் 50 வருடங்களுக்குப் பிறகு திருதேரானது வலம் வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.