கஞ்சா, கள்ளசாராயம், கொலைகளை போலீ்சார் கண்டு கொள்ளவதில்லை: காந்தி | Kanyakumari |Undetected police
கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் ஊராட்சித்தலைவி விஜயராணி தலைமையில் கடந்த 22 ம் தேதி ஊராட்சி கூட்டம் நடைபெற்றது. முறைகேடுகள் நடப்பதாக கூறி கவுன்சிலர்கள் சுரேஷ், ஜோசப் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அலுவலக கோப்புகளை கிழித்து ரகளையில் ஈடுபட்டதாக ஊராட்சி தலைவி விஜயராணி புதுக்கடை போலீசில் புகார் கூறினார். போலீசார் புகாருக்கு மனு ரசிது கொடுக்கவில்லை, வழக்கும் பதியவில்லை. ஊராட்சி தலைவி மற்றும் அவரது கணவர் சேர்ந்து கவுன்சிலர்கள் சுரேஷ், ஜோசப் இருவரையும் தாக்கியதாக புதுக்கடை போலீசில் வழக்கு பதிவு செய்யபட்டது. ஊராட்சி தலைவர் மீது பொய்வழக்கு போட்டதாக பைங்குளம் ஊராட்சி அலுவலகம் முன்பு நாகர்கோவில் பாஜ எம்எல்ஏ எம்.ஆர். காந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பொய்வழக்கை ரத்து செய்ய வேண்டும், ஊராட்சி தலைவி கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.