உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / ராஜஸ்தான் கொள்ளையர் மூவருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் | dacoity case - Rajasthan youth arrested

ராஜஸ்தான் கொள்ளையர் மூவருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் | dacoity case - Rajasthan youth arrested

ராஜஸ்தான் கொள்ளையர் மூவருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் / dacoity case - Rajasthan youth arrested / Krishnagiri கிருஷ்ணகிரி ராயக்கோட்டை பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவர் காலுராம். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் மனைவி யசோதா மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் வசிக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு மாலை காலுராம் கடையில் இருந்தார். அவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். இரண்டு வயது குழந்தை கழுத்தில் கத்தி வைத்து பணம், நகைகளை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். பதறிய யசோதாவிடம், பீரோவை திறக்க கட்டளையிட்டனர். பயந்து நடுங்கிய யசோதா பீரோவை திறந்தார். அதிலிருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து கும்பல் எஸ்கேப் ஆனது. விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சங்காசிங், சுரேந்திர சிங் மற்றும் லட்சுமணராம் என தெரியவந்தது. மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணம் மீட்கப்பட்டது. இவ்வழக்கு தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் நடந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ஹரிஹரன், கொள்ளையர் மூவருக்கும் தலா 10 ஆண்டு கடும் காவல் தண்டனை மற்றும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை