திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Satsang Madurai
மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள ஸத்சங்கத்தில் ஸ்ரீகாயத்ரி மஹா யக்ஞம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸத்சங்கம் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
ஆக 11, 2024