/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா கோலாகல துவக்கம்|Aanmeegam| thiruparankundram murugan temple
திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா கோலாகல துவக்கம்|Aanmeegam| thiruparankundram murugan temple
முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவர் சன்னதியில் முருகர், தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். முருக பெருமான் முன்னிலையில் தங்க முலாம் பூசிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. மொத்தம் 15 நாட்கள் திருவிழா நடைபெறும். முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியா விடை முன்னிலையில் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் 28ம் தேதி நடக்கிறது.
மார் 15, 2024