உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 3 மாவட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Madurai | Angala Iswari Temple Kumbabhishekam

3 மாவட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Madurai | Angala Iswari Temple Kumbabhishekam

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த சிந்துபட்டி கண்மாய் கரையில் உள்ள அங்காள ஈஸ்வரி, வாலகுருநாத சுவாமி கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றன. தொடர்ந்து கும்பாபிேஷக யாக பூஜைகள் கடந்த 12ம் தேதி துவங்கியது. இன்று நான்காம் கால யாக பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. சிவசாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை வெகு விமரிசையாக நடத்தி வைத்தனர். பக்தர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அங்காள ஈஸ்வரி அம்பாள், வாலகுருநாத சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை