உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை திமுக எம்எல்ஏ தளபதி வீட்டு முன் தீக்குளித்த நிர்வாகி | DMK executive set on fire | Madurai

மதுரை திமுக எம்எல்ஏ தளபதி வீட்டு முன் தீக்குளித்த நிர்வாகி | DMK executive set on fire | Madurai

மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ தளபதி. இவர் திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே வசித்து வருகிறார். இவரது தீவிர ஆதரவாளரும் திமுக பிரமுகருமான மானகிரி கணேசன். கடந்த சட்டசபை தேர்தலில் தளபதி வெற்றி பெற இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார். தனக்கு மேலுாரில் சீட் கேட்டு தளபதியை நாடினார். ஆனால் தளபதி சீட் வாங்கி தரவில்லை. கட்சிக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தது தான் மிச்சம். தளபதியை நம்பி பத்து காசுக்கு பயனில்லை என குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகளிடம் கூறி புலம்பி வந்தார். கொஞ்ச நாளாகவே மன உளைச்சலில் இருந்த கணேசன் இன்று காலை 8 மணிக்கு பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்த கேனுடன் தளபதி வீட்டிற்கு சென்றார். தளபதி வீட்டு வாசல் முன் உடலில் பெல்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் கணேசனை தடுத்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீக்குளிப்பு சம்பவத்தில் கணேசனுக்கு கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். கட்சி பிரமுகர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உடன் பிறப்புக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ