உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / முன்னெச்சரிக்கை செய்யாததால் விவசாயிகள் தவிப்பு | Farmers suffer due to lack of precautions | Kottam

முன்னெச்சரிக்கை செய்யாததால் விவசாயிகள் தவிப்பு | Farmers suffer due to lack of precautions | Kottam

புகையிலை கம்பளி பூச்சி தாக்கு கருகும் வாழை இலை புகையிலை கம்பளிபூச்சியால் வாழை சாகுபடி பாதிப்பு வாழையை தாக்கும் ஸ்போடோப்டெரா லிட்டுரா புழுக்கள் இளம், முதிர் புழுக்கள் வாழை இலையின் சத்துகளை உறிஞ்சி அழிக்கிறது வாழை சாகுபடியில் மகசூல் கடும் சரிவு முன்னெச்சரிக்கை செய்யாததால் விவசாயிகள் தவிப்பு மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி பெருமளவு நடக்கிறது. நெல் மற்றும் தென்னைக்கு அடுத்தபடியாக இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கும் பல பகுதிகளில் இருந்து வாழை இலைகள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. வாழை சாகுபடியில் மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள், பூச்சி தாக்குதல்கள் ஏற்படும். கொட்டாம்பட்டி பகுதியில் மட்டும் 80 ஏக்கரில் வாழை சாகுபடி நடக்கிறது. சாகுபடி செய்த 3 மாதங்களிலேயே புழுக்களால் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஸ்போடோப்டெரா லிட்டுரா எனப்படும் புகையிலை வெட்டுப்புழு வாழை இழைகளின் பச்சையம் சத்துக்களை உறிஞ்சிக் குடித்து அழித்து வருகிறது. ஸ்போடோப்டெரா லிட்டுரா என்பது புகையிலை கம்பளிப்பூச்சி அல்லது டாரோ கம்பளிப்பூச்சி என்று அழைக்கப்படும் ஒரு தீங்கு உயிரியாகும். இது வாழை, பருத்தி, தக்காளி, சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலவகையான பயிர்களைத் தாக்கி இலைகளின் பச்சையம் சத்துக்களை குடித்து உயிர் வாழ்கின்றன. இவ்வகை தீங்கிழைக்கும் பூச்சிகளால் வாழை மகசூல் பெருமளவு குறைந்து வருகிறது. இவ்வகை கம்பளிப்பூச்சிகள் பகலில் பிளவுகளில் ஒளிந்துகொண்டு இரவில் உணவளிக்கின்றன. இலைகளின் அடிப்பகுதிகளில் கொத்து கொத்தாக சுமார் 200 முதல் 300 வரை முட்டைகள் இடும். அவைகள் பழுப்பு நிற மூடிகளால் மூடப்பட்டிருக்கும். அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் பச்சை நிறத்தில் காணப்படும். வாழை இலைகளின் பச்சையம் சத்துக்களை உண்பதால் வாழை இலைகளில் சல்லடை போன்ற ஓட்டைகள் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் காய்ந்து கருகிவிடும். சுமார் 300 வரையிலான இளம்புழுக்களால் வாழை இலை ஆரம்ப காலத்திலேயே கருக்க ஆரம்பித்து வீணாகிவிடுகிறது.

நவ 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி