மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் கைவினைஞர்கள் துறை, மதுரை பெட்கிராட் ஏற்பாடு
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் கைவினைஞர்கள் துறை, மதுரை பெட்கிராட் ஏற்பாடு | Indian handicrafts continuning tradition | Fedcrat | Madurai இந்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் கைவினைஞர்கள் துறை, மதுரை பெட்கிராட் சேவை நிறுவனம் சார்பில் காந்தி சில்ப் பஜார் எனும் அகில இந்திய கைவினைப் பொருட்களின் விற்பனை கண்காட்சி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் துவங்கியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் அங்கீகாரம் பெற்ற கைத்திறன் தொழில் நிறுவனங்களின் 70 க்கும் மேறற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு அனைத்து பாரம்பரிய கைவினை பொருட்கள், ஜவுளிகள் மற்றும் ரெடிமேடு துணிகள் உள்ளிட்ட அனைத்தும் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு தள்ளுபடி விற்பனையும் உண்டு. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 70 ஸ்டால்கள், இந்தியா முழுவதிலும் உள்ள தலைசிறந்த அனைத்து கைவினை கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் நேரடியாக சந்தைப்படுத்துவதால் குறைந்த விலையில் தரமான பொருட்கள் மற்றும் ஜவுகளை வாங்கலாம். இக்கண்காட்சியில் கைவினை கலைஞர்களின் நேரடி செய்முறை விளக்கம், வாடிக்கையாளர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். இக்கண்காட்சி டிசம்பர் 15 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.