தேசிய விருதுகளுடன் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற மனிதாபிமான கொள்ளையர்
தேசிய விருதுகளுடன் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற மனிதாபிமான கொள்ளையர் | Robbery at the house of a film directer மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திரைப்பட இயக்குனர் மணிகண்டன். இவரது வீடு, அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் எழில்நகரில் உள்ளது. அவர் சென்னை சென்றதால் வீடு ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக்கிடந்தது. கடந்த பிப்ரவரி 8ம் தேதி மாலை 4:00 மணிக்கு அவரது அலுவலகம் வந்த பணியாளர்கள் வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதை பார்த்து போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், 5 பவுன் நகை, கடைசி விவசாயி படத்திற்கு கிடைத்த 2 தேசிய விருது பதக்கங்கள் திருடு போனது தெரியவந்தது. உசிலம்பட்டி போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருது பதக்கங்களுடன் மன்னிப்பு கேட்டு கொள்ளையர் கடிதம் எழுதினர். அதில் உங்கள் உழைப்பு உங்களுக்கே; எங்களை மன்னித்து விடுங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். அந்தக் கடிதத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு வீட்டின் முன்பு கட்டி வைத்துச் சென்றனர். திருடிய தேசிய விருதுகளை மீண்டும் வழங்கிய மனிதாபிமான திருடர்களை உசிலம்பட்டி போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.