யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பெட்கிராட் ஏற்பாடு
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பெட்கிராட் ஏற்பாடு | supply of free sewing machine | union Bank of India - fedcrot | madurai மதுரை பெட்கிராட் தொண்டு நிறுவனம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச சுய தொழில் பயிற்சி கற்றுக் கொடுத்து வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 106வது ஆண்டு விழாவையொட்டி பெட்கிராட் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 106 பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கு விழா நடைபெற்றது. பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மண்டல மேலாளர் அபிஜித் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா தையல் மிஷன்களை வழங்கி வாழ்த்தி பேசினர். விழாவில் வங்கி முதுநிலை மேலாளர்கள் சம்பத்குமார், செல்வராணி, சார்லஸ், பெட்கிராட் நிர்வாகிகள் அங்குசாமி, கிருஷ்ணவேணி, சாராள் ரூபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.