மதுரையில் ஹிந்து அமைப்புகள் ஜனவரி 12ல் ஆலோசனை | Thiruparankundram | Hill temple | Madurai
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கு சென்று வழிபட தடை இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் ஆடு பலி கொடுக்க ராஜபாளையம் மிலாம்பட்டி சையது அபுதாகீர் என்பவர் முயற்சித்தார். போலீசார் தடுத்தனர். இதைக்கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் தர்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதை மறுத்துள்ள தமிழக அரசின் சமூக ஊடக சரி பார்ப்பகம், இது முற்றிலும் பொய். தர்காவில் ஆடுகளை பலிகொடுப்பது தொடர்பாக கோர்ட் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து பொய் காரணங்களை கூறி பிரசாரம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் கந்தர் மலை புனிதத்தை காக்கும் வகையில் ஜனவரி 12ம் தேதி ஹிந்து அமைப்புகள், பக்தர்கள், பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.