உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரையில் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் | Tungsten Mineral Mining | Villagers Protest

மதுரையில் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் | Tungsten Mineral Mining | Villagers Protest

மதுரையில் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் | Tungsten Mineral Mining | Villagers Protest | Melur | Madurai மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாயக்கர்பட்டியில் துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் சார்பில் ஐந்தாயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ளது. இத்திட்டம் செயல்பட்டால் பல்லுயிர் பூங்காவான அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக அரிட்டாபட்டியில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் 11 கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதில் நவம்பர் 23ம் தேதி நடக்கும் 11 கிராம சபைகள் கூட்டங்களில் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் முடிவு செய்தனர். இத்தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து நவம்பர் 26 அழகர்கோவிலில் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை