உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்| subrahmanyasami temple consecration| Tiruparankundram

ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்| subrahmanyasami temple consecration| Tiruparankundram

ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்/ subrahmanyasami temple consecration/ Tiruparankundram முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம், நேற்று யாகசாலை பூஜைகளுடன் விமர்சையாக துவங்கியது. யாகசாலை மண்டபத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். யாகசாலை பூஜை துவக்கத்தை முன்னிட்டு, பிரசன்னா அபிஷேகம், அக்னி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் நிர்மாண பூஜை நடைபெற்றது. 96 வகையான மூலிகைகள் மற்றும் ஒன்பது வகையான சமித்துக்கள் அடங்கிய புனித நீர் நிரம்பிய கடம் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜையுடன் முளைப்பாரி இட்டு, கங்கணம் கட்டப்பட்டது. யாகசாலையில் மொத்தம் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகா பூர்ணாகுதி மற்றும் ஷோடச தீபாராதனையுடன் முதல் கால யாகசாலை நிறைவடைந்தது.

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை