உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நெல்லியாளம் நகராட்சி கமிஷனரிடம் திமுக கான்ட்ராக்டர் புகார் | Bribe | Complaint to Commission agains

நெல்லியாளம் நகராட்சி கமிஷனரிடம் திமுக கான்ட்ராக்டர் புகார் | Bribe | Complaint to Commission agains

நெல்லியாளம் நகராட்சி கமிஷனரிடம் திமுக கான்ட்ராக்டர் புகார் | Bribe | Complaint to Commission against Municipal Chairperson | Nelliyalam நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சிவகாமி உள்ளார். இவர் தன்னிச்சையாக செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. பிரதர் கன்ஸ்ட்ரக்சன் என்ற (brother construction) என்ற ஒப்பந்த நிறுவனம் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகளில் பணிகளை செய்து வருகிறது. இதில் நெல்லியாளம் நகராட்சியின் பெண் தலைவர் சிவகாமி மே மாதம் 23 ம் தேதி பிரதர் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளரும் ஒப்பந்ததாரருமான ராயின் வீட்டிற்கு வந்து இரண்டு லட்ச ரூபாய் கடன் கேட்டுள்ளார். ராயின், சிவகாமியின் வங்கிக் கணக்கில் இரண்டு லட்சத்தை செலுத்தினார். ஆனால் அந்த இரண்டு லட்ச ரூபாயை சிவகாமி கொடுக்காமல் தொடர்ந்து ஒப்பந்ததாரரை மிரட்டும் விதமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது கடந்த மாதம் ஒப்பந்ததாரர் கண்டிப்புடன் அவரிடம் பணத்தை கேட்கும் போது. உங்களின் மகன்களும் ஒப்பந்தம் எடுத்து தற்போது பணியாற்றி வருகிறார். மேலும் அப்பணியை உங்கள் மகன்களுக்கு வழங்கிய வகையில் எனக்கு லஞ்சமாக 20 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதில் 2 லட்சம் ரூபாய் கடனை எடுத்துக்கொண்டு 18 லட்சம் ரூபாயை உடனே கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓப்பந்த பணிகளை ரத்து செய்துவிடுவேன் என கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் ராயின் ஆதராங்களுடன் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்க வந்தார். ஆணையாளர் இல்லாததால் அலுவலக மேலாளரிடம் தனது புகாரை அளித்தார். தொடர்ந்து முதல்வர், உள்ளாட்சி செயலாளர் உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து புகார் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ