மர்ம விலங்கைகண்காணிக்க3 இடங்களில் கண்காணிப்புகேமரா|Nilgiris | track the leopard Surveillance cameras
மர்ம விலங்கை கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா | Nilgiris | track the leopard Surveillance cameras நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பாலாஜி நகர், ஆரோக்கியபுரம் பகுதிகளில் இரவில் சிறுத்தைகள் வந்து நாய்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவதாக பகுதி மக்கள் புகார் கூறினர். சிறுத்தையை குண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் வலியுறுத்தினர். வனச்சரகர் செல்வகுமார் மேற்பார்வையில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். பாலாஜி நகர், ஆரோக்கியபுரம் மற்றும் வெலிங்டன் கேவிபள்ளி ஆகிய மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நடமாட்டம் உறுதியானதும் கூண்டு வைத்து பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.