கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வம் | AIDS awareness Mini marathon| Karaikal
கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வம்/ AIDS awareness Mini marathon/ Karaikal புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து காரைக்காலில் மாவட்ட அளவிலான AIDS விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தினர். போட்டியை மாவட்ட துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஆண், பெண் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். காரைக்கால் கலெக்டர் ஆபீஸிலிருந்து துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர் மாரத்தான் தடம் மீண்டும் கலெக்டர் ஆபீஸை வந்தடைந்தது. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், மெடல் மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் 20 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.