உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு Dinamalar pattam quiz competition

மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு Dinamalar pattam quiz competition

தினமலர் பட்டம் இதழ் சார்பில் பதில் சொல் பரிசு வெல் என்ற மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரி ஆச்சார்யா பாலசிக்சா மந்திர் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 600 மாணவர்கள் முதல் நிலை தேர்வில் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு தொடர்பாக 25 கேள்விகள் கேட்கப்பட்டு 20 நிமிடம் தேர்வு நடந்தது. மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே வெங்கட்ராமன், சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு மற்றும் ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் பங்கேற்று வினாடி வினா நிகழ்ச்சி துவக்கி வைத்தனர். தேர்வு செய்யப்பட்ட 16 மாணவர்களும் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்பட்டன.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை