உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் /oppiliyappan perumal koil /Brahmosava festival /kumbakonam கும்பகோணம் அருகே தமிழக திருப்பதி என போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலின் கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு தீபாராதனைகள் நடைபெற்றன. இவ்விழா 12 நாட்கள் நடைபெறும். பெருமாள் பூமி தேவியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் இக்கோயில் திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்கு உரியதாகும். தமிழகத்தில் வேறு எங்கும் துலாபாரம் இல்லாத நிலையில் இந்த கோயிலில் மட்டும் துலாபாரம் உள்ளது. கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை