இனி பாட்சா பலிக்காது என்கிறார் புதுச்சேரி கவர்னர் CPR | Servant Workplace covernor's action
இனி பாட்சா பலிக்காது என்கிறார் புதுச்சேரி கவர்னர் CPR | Servant Workplace covernors action | Puducherry புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சர்வீஸ் பிளேஸ்மென்ட் என்ற பெயரில் அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் எடுபிடி வேலை பார்த்து வருவதால் அரசு பணிகள் தேக்கமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அரசுத்துறையை சீர்படுத்தும் நடவடிக்கையில் கவர்னர் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக சர்வீஸ் பிளேஸ்மெண்டில் சென்றுள்ள அரசு ஊழியர்களின் முழு தகவல்களையும் உடனடியாக அளிக்க அரசு நிர்வாக சீர்திருத்த துறைக்கு உத்தரட்டார். அதைத் தொடர்ந்து அரசு துறை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு நிர்வாக சீர்திருத்த துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.