உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த பகீர் சம்பவங்கள்| Crime| Law and order| Public Safety| Dinamalar

ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த பகீர் சம்பவங்கள்| Crime| Law and order| Public Safety| Dinamalar

ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த பகீர் சம்பவங்கள்| Crime| Law and order| Public Safety| Dinamalar Breath (can use cctv visuals) சேலம் ஆத்தூர் தென்னங்குடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரபு. வயது 37. தனியார் மகளிர் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வருகிறார். இவரது அக்கா முகந்தி. வயது 40. வீரகனூரில் வசிக்கிறார். அக்கா தம்பி இடையில் சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. ராம் பிரபு வீரகனூரில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார். இருவருக்கும் தகராறு முற்றியது. திடீரென முகந்தியை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு ராம் பிரபு தப்பி ஓடினார். முகந்தியின் கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆத்தூர் தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். விஷயம் அறிந்த முகந்தியின் உறவினர்கள் சக்திவேல் மற்றும் கோபிநாத், இதுதொடர்பாக ராம் பிரபுவை கண்டிக்க சென்றனர். நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகில் ராம்பிரபு பதுங்கி இருந்தார். சக்திவேல் மற்றும் கோபிநாத் கடுமையாக சாடினர். மூவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. எதிர்பாராத விதமாக திடீரென ராம் பிரபு கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்தினார். இதில் கோபிநாத் மற்றும் சக்திவேல் படுகாயம் அடைந்தனர். தப்பியோட முயன்ற ராம் பிரபு மீது எதிரில் வந்த அரசு பஸ் மோதியது. இதில் ராம்பிரபு ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். வயிற்றுப் பகுதியில் படுகாயத்துடன் கோபிநாத் சேலம் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். கையில் காயமடைந்த சக்திவேல் ஆத்தூர் அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரிக்கின்றனர். சொத்துத் தகராறில் உறவினர்களிடையே நடந்த இந்த கத்திக்குத்து சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜன 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை