உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / இழப்பீடு எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் | cyclone - damaged corn crop | salem

இழப்பீடு எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் | cyclone - damaged corn crop | salem

சூறாவளியால் 500 ஏக்கர் மக்காச்சோளம் சேதம் டிஸ்க்: இழப்பீடு எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் / cyclone - damaged corn crop / salem சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி பகுதிகளில் பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், மஞ்சள், கரும்பு, வாழை, கறிவேப்பிலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் தொடர்ந்து 2 மணி நேரம் ஆத்துார், தலைவாசல் பகுதியில் சூறாவளி வீசியது. சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் வெள்ளையூர், பகடப்பாடி, கவர்பனை, பின்னனுார், கிழக்குராஜாபாளையம், புளியங்குறிச்சி, திட்டச்சேரி, சிறுவாச்சூர், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை, சதாவசிபுரம், அம்மம்பாளையம், கல்லாநத்தம் உள்ளிட்ட இடங்களில் 500 ஏக்கருக்கு மேலான மக்காச்சோளப் பயிர்கள் முறிந்தன. கதிர்கள் பிடித்துள்ள நிலையில் பயிர்கள் கீழே விழுந்ததால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் வேளாண் அலுவலர்கள் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இழப்பீடு தொகையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தலைவாசல் வேளாண் அலுவலர்கள் கூறுகையில், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை, சிறுவாச்சூர், கவர்பனை, வெள்ளையூர் பகுதிகளில் ஆய்வு நடக்கிறது. ஆய்வறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்படும், என்றனர்.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை