உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / தவெக அதிரடி | The struggle of drinking alcohol with family | TVK | DMK

தவெக அதிரடி | The struggle of drinking alcohol with family | TVK | DMK

தவெக அதிரடி / The struggle of drinking alcohol with family / TVK / DMK சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயிலடி தெருவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனருகே தனியார் மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. குடிமகன்கள் போதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபடுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுக்கடையை உடனே அகற்றக்கோரி தவெக சார்பில் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால் குடும்பத்தோடு வந்து மதுக்கடையில் மது குடிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். இதில் பள்ளி சீறுடையில் மாணவிகள் பங்கேற்றனர்.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை