ஆத்தூரில் பட்ட பகலில் நடந்து சென்ற டாக்டர் மனைவியிடம் முகமூடி கொள்ளையன் அட்டகாசம்
ஆத்தூரில் பட்ட பகலில் நடந்து சென்ற டாக்டர் மனைவியிடம் முகமூடி கொள்ளையன் அட்டகாசம் | Women chain theft | Attur சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் விஸ்வநாதன், வயது 70. இவரது மனைவி பத்மினி, வயது 66. இன்னர்வீல் சங்க முன்னாள் மகளிர் பிரிவு தலைவியான இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த கலா என்பவருடன் கோயிலுக்கு காலை 11 மணிக்கு சென்றார். திருநாவுக்கரசு தெரு வழியாக சென்றபோது எதிரே முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர் பத்மினி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து தப்பினான். இதில் பத்மினிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. முகமூடி கொள்ளையனை கைது செய்ய ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் டவுன் போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடுகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் டாக்டர் மனைவியிடம் வழிப்பறி செய்த சம்பவம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.