மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு |DMK administrator murder| Relatives protest |Sivagangai
மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு /DMK administrator murder/ Relatives protest /Sivagangai சிவகங்கை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் பிரவீன் குமார். வயது 27. இன்று காலை தனது சொந்த ஊரான சாமியார் பட்டியலில் உள்ள தனது தோப்பில் இருந்தார். திடீரென தோப்பில் புகுந்த மர்மகும்பல் பிரவீன் குமாரை வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த பிரவீன் குமார் உயிரிழந்தார். ஸ்பாட்டில் போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மானாமதுரை சிவகங்கை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருக்கும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.