/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை | temple festival | manamadura
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை | temple festival | manamadura
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு பாத்தியப்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாத வெள்ளிக் கிழமையில் உலக நன்மை, விவசாயம் செழிக்க, மக்கள் நோய்,நொடி இல்லாமல் வாழ வேண்டி 508 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று இரவு நடைபெற்றது. பெண்கள் 508 திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். முன்னதாக ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு திருமாங்கல்யம், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
மார் 08, 2025