உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / மாணவர்களை மனு கொடுக்க அழைத்து வந்தால் நடவடிக்கை

மாணவர்களை மனு கொடுக்க அழைத்து வந்தால் நடவடிக்கை

மாணவர்களை மனு கொடுக்க அழைத்து வந்தால் நடவடிக்கை | Case against the school children who brought them to file petition தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த மக்கள் சாலை வசதி வேண்டி பள்ளி குழந்தையுடன் மனு அளித்தனர். இதனைக் கண்டித்த கலெக்டர்,பள்ளி மாணவர்களை மனு கொடுக்க அழைத்து வந்தது யார். பள்ளி குழந்தைகளை மனு கொடுக்க அழைத்து பதிவு செய்யப்படும் என எச்சரித்தார். அதேபோல் வடகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பள்ளி மாணவ மாணவிகளுடன் பஸ் வசதி கேட்டு மனு கொடுக்க வந்தனர். இதை பார்த்து கோபமடைந்த கலெக்டர், குழந்தைகளைப் படிக்க வைப்பது தான் பெற்றோர் பொறுப்பு. முதலில் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வாருங்கள். உங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கிறேன் எச்சரித்தார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை