₹54 ஆயிரம் பரிசு தொகை| vaduvoor Rajasekaran memorial marathon | mannargudi
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றவர் வடுவூர் ராஜசேகரன் . 1962 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி 100 மீட்டர் ஓட்டத்தில் வடுவூர் ராஜசேகரன் தங்கப்பதக்கம் வென்றார். இந்திய தடகள அணியின் பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்றார். வடுவூர் ராஜசேகரன் நினைவாக மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலிருந்து வடுவூர் வரை 14 கிலோமீட்டர் போட்டி நடைபெற்றது. போட்டியை டிஎஸ்பி பிரதீப் துவக்கி வைத்தார். போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒன்பதாயிரம் ரூபாய் மற்றும் மூன்றாவது பரிசாக எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை வடுவூர் விளையாட்டு அகாடமி குழுவினர் செய்தனர்