சென்னை கிரிக்கெட் கோச்சர் கைது; மனைவிஉட்படசிலர்எஸ்கேப்|Job Fraud | Cricker Coach Arrest | Chennai
சென்னை கிரிக்கெட் கோச்சர் கைது; மனைவி உட்பட சிலர் எஸ்கேப் | Job Fraud | Cricker Coach Arrest | Chennai தேனி ஜெயம் நகரை சேர்ந்தவர் குகன்ராஜா. இவரது உறவினர் பெரியகுளம் அருகே தென்கரையில் வசிக்கும் சிவபாலன். சிவபாலனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறிய குகன்ராஜா, சென்னையை சேர்ந்த கிரிக்கெட் கோச்சர் பூகிஸ்வரன், அவரது மனைவி ஜெயஸ்ரீயை சிவபாலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தம்பதியனர் ரயில்வே துறையில் உயர் அதிகாரிகளை தெரியும், அங்கு வேலை வாங்கி தரமுடியும் என சிவபாலனிடம் ஆசை வார்த்தை கூறினர். இதையடுத்து சிவபாலன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் 2019ல் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாயை குகன்ராஜாவை வைத்து தம்பதியிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் ரயில்வே துறைக்கான பணிநியமன ஆணையை வழங்கி உள்ளனர். பின்னர் அந்த ஆணை போலியானது என தெரிய வந்ததால், இளைஞர்கள் தேனி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பூகிஸ்வரனை போலீசார் கைது செய்தனர். தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.