தேனி கடமலைக்குண்டு பஜாரில் பட்டப்பகலில் பயங்கரம் | Theni | Teenagers threatening traders
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கடமலைக்குண்டு பஜார் வீதியில் மூன்று வாலிபர்கள் போதையில் ரோட்டில் நின்ற டூவீலர்களை தள்ளி விட்டு அட்டகாசம் செய்தனர். அங்கிருந்த வியாபாரிகள் வாலிபர்களை தட்டி கேட்டனர். ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி வியாபாரிகளை குத்தப் பாய்ந்தார். அச்சமடைந்த வியாபாரிகள் கடைகளுக்குள் ஓடினர். விடாமல் துரத்திய வாலிபர்கள் வியாபாரிகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். கடைக்குள் சென்று வியாபாரிகள் கதவை அடைத்துக் கொண்டதால் உயிர் தப்பினர். வியாபாரிகள் கடமலைக்குண்டு போலீசில் புகார் கூறினர். அங்கு வந்த போலீசார் வாலிபர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். கண் இமைக்கும் நேரத்தில் சிட்டாய் பறந்து மூவரும் மறைந்தனர். போலீஸ் விசாரணையில் அலப்பறையில் ஈடுபட்டவர்கள் கடமலைக்குண்டு அம்பேத்கர் காலனியை சேர்ந்த சதீஷ், கருப்பசாமி மற்றும் காமாட்சி என தெரியவந்தது. தனிப்படை அமைத்து போலீசார் தேடுகின்றனர்.