உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / பலே போலி PA கைது | money forgery | municipal commissioner cheated | tiruvarur

பலே போலி PA கைது | money forgery | municipal commissioner cheated | tiruvarur

திருவாரூர் நகராட்சி கமிஷனர் தாமோதரன். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் துணை முதல்வர் உதயநிதி பி.ஏ பேசுவதாக கூறினார். காரில் டயர் மாற்ற வேண்டும் என கடனாக பணம் கேட்டார். இதை நம்பிய தாமோதரன் 7500 ரூபாய் ஜி.பே செய்தார். மீண்டும் போன் செய்த மர்ம நபர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்காக 2500 ரூபாய் கேட்டு கேட்டு பெற்றார். மொத்தம் பத்தாயிரம் ரூபாயாக திரும்பி தருவதாக கூறினார். சந்தேகமடைந்த தாமோதரன் சென்னையில் உள்ள துணை முதல்வர் ஆபிஸிற்கு போன் செய்து விசாரித்தார். போனில் பேசிய நபர் போலி ஆசாமி என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். திருவாரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போன் நம்பரை ட்ராக் செய்த தனிப்படை போலீசார் போலி ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி எட்டையபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் என தெரியவந்தது. திமுக இளைஞர் அணி மாநாட்டில் சமையல் வேலைக்கு சென்றார். அங்கு திமுகவினரிடேயே பழக்கம் ஏற்பட்டது. அன்று முதல் இதுபோன்று பல மோசடியில் சரவணக்குமார் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்னர். இவர் மீது தூத்துக்குடி, திருவண்ணாமலை மற்றும் சென்னையில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ