உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்தூர் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பு | Tiruchendur | Kumbabhishekam

திருச்செந்தூர் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பு | Tiruchendur | Kumbabhishekam

திருச்செந்தூர் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பு / Tiruchendur / Kumbabhishekam திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி காலை 6:15 மணி முதல் 6.50 மணிக்குள் நடக்கிறது. இதற்கான யாக பூஜைகள் கடந்த 1ம் தேதி துவங்கி 12 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. ராஜ கோபுரத்தில் உள்ள கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற சிவாச்சார்யார்கள் செல்வதற்கு வசதியாக ராஜ கோபுரத்தில் இரும்பு கம்புகளால் சாரங்கள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இப்பணிகள் நிறைவு பெற்றது. கோயில் விமான தளத்தில் இருந்து பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண 40,000 சதுர அடி பரப்பளவில் பிரத்யேகமான பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. விமான தளத்தில் முக்கிய விஐபிக்கள் கும்பாபிஷேகத்தை காண சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராஜகோபுரம் அருகில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 71 குண்டங்கள் சுப்பிரமணியர் மற்றும் பரிகார தெய்வகளுக்கு சிவாச்சார்யார்களால் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. பெருமாளுக்காக அமைக்கப்பட்ட 5 குண்டங்களில் பட்டாச்சார்யார்களால் இன்று மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !