/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ விறுவிறுப்பான ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற MDN ஃப்யூச்சர் பள்ளி| Sports
விறுவிறுப்பான ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற MDN ஃப்யூச்சர் பள்ளி| Sports
திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் கோயம்புத்தூர் சகோதயா இன்டர் பள்ளி சார்பாக 4 முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 9 முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கோ- கோ போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி இயக்குனர் பானுமதி வரவேற்றார். பள்ளி முதல்வர் சரளாதேவி முன்னிலை வகித்தார். 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட பள்ளிகளில் கோவை MDN FUTURE CBSE பள்ளி மற்றும் SRI Vivekananda public பள்ளி இறுதிப் போட்டிற்கு தகுதி பெற்றன. இதில் SRI Vivekananda public பள்ளி இரண்டாம் பரிசு பெற்றது.
ஜன 07, 2024