அரசுப்பள்ளி மாணவர் அணி அபாரம்| District Football tournament| Tiruppur
அரசுப்பள்ளி மாணவர் அணி அபாரம்| District Football tournament| Tiruppur திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 4ம் தேதி துவங்கியது. 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கே.செட்டிபாளையம் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நடந்தது. அதேபோல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் கால்பந்து நஞ்சப்பா பள்ளியில் நடந்தது. மொத்தம், 14 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது. மாணவியர் கால்பந்து இறுதி போட்டியில், உடுமலை என்.வி. மெட்ரிக் பள்ளி மற்றும் குன்னத்துார் என்.ஆர்.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதினர். இதில் 3-0 என்ற கோல் கணக்கில் உடுமலை குறுமைய அணி அபார வெற்றி பெற்றது. மாணவர் கால்பந்து இறுதி போட்டியில், இன்பான்ட் ஜீசஸ் பள்ளி அணி மற்றும் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியுடன் மோதியது. இதில், 3 - 0 என்ற கோல் கணக்கில் அவிநாசி அரசு பள்ளி அணி வென்றது. நாளை, 14 வயது பிரிவு மாணவ, மாணவியருக்கான கால்பந்து போட்டி நடக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.