/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதை | School Sports day | Udumalpet
மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதை | School Sports day | Udumalpet
உடுமலை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் விளையாட்டு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளிக் கல்விக்குழுத் தலைவர் கவிதா வரவேற்றார். போட்டியை திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் அன்பரசு துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பள்ளிக் குழந்தைகள் ஒழுக்க நெறிகளோடு கூடிய கல்வியைப் பெற்று வாழ்வில் உயர வேண்டும் என வாழ்த்தினார்,
ஆக 17, 2024