வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி| District level Tennikoit Tournament| Tirupur
வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி| District level Tennikoit Tournament| Tirupur பள்ளி கல்வித்துறை சார்பில், திருப்பூர் வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டி நடைபெற்றது. பள்ளி செயலாளர் நகுலன், போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 64 பேர் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். அண்டர் 14, 17 மற்றும் 19 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். 14 வயது ஒற்றையர் பிரிவில், கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி அணி, இரட்டையர் பிரிவில் அய்யங்காளிபாளையம் பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயது ஒற்றையர் பிரிவில், வித்யவிகாஷினி பள்ளி, இரட்டையர் பிரிவில், காங்கயம், ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றனர். 19 வயது ஒற்றையர் பிரிவில், வித்யவிகாஷினி பள்ளி, இரட்டையயர் பிரிவில் அய்யங்காளிபாளையம் பள்ளி அணிகள் வெற்றி பெற்றனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.