தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தேசிய போட்டியில் மோதல் | TN Basketball selection| National Tournamen
தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தேசிய போட்டியில் மோதல் | TN Basketball selection| National Tournament| Tirupur திருப்பூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூடைப்பந்து மைதானத்தில் தமிழக அணி வீரர்கள் தேர்வு போட்டி நடைபெற்றது. போட்டிகளை இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தினர். மாவட்ட உடற்கல்வி அலுவலர் ரகு குமார் போட்டியை துவக்கி வைத்தார். தமிழகத்திலிருந்து 8 மண்டலங்களைச் சேர்ந்த 19 வயதிற்கு உட்பட்ட 48 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டி இறுதியில் பன்னிரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்பர்.