போதை சிறுவன், இளைஞர் இருவர் கைது | Tripur crime
திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த 22 வயது ஆகாஷ் குமார் வேலை பார்த்தார். கடந்த 15ம் தேதி இரவு பணி முடிந்து அருகில் உள்ள தனது அறைக்கு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஆகாஷை சுற்றி வளைத்து செல்போனை பறிக்க முயன்றனர். ஆகாஷ் செல்போனை தர மறுத்ததால் மூன்று பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்து எஸ்கேப் ஆகினர். பலத்த காயமடைந்த ஆகாஷ் அங்கிருந்து தப்பி தனது அறையில் இருந்த நண்பர்களை சந்தித்து சம்பவம் குறித்து கூறினார். ஆகாஷை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அங்கு இறந்தார். இதையடுத்து சக தொழிலாளர்கள் நிறுவனத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கொலை வழக்கில் 19 வயது பிரவீன்குமார், பாண்டியராஜன் மற்றும் 16 வயது சிறுவனை திருமுருகன் பூண்டி போலீஸார் கைது செய்தனர். மது போதையில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆகாஷ் குடும்பத்துக்கு பனியன் நிறுவனம் சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.