தருமை ஆதீனம் பங்கேற்பு | ayyanar kannimarr koil function
மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் உப கோயிலான பூர்ண புஷ்கலா உடனுறை அய்யனார் கன்னிமார் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக துவங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிேஷக விழாவில் தருமை ஆதீனம் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
செப் 15, 2024