முதல் போட்டியில் திருச்சி மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் அணி வெற்றி | Trichy | Basketball Tournament
முதல் போட்டியில் திருச்சி மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் அணி வெற்றி / Trichy / Basketball Tournament திருச்சி மாவட்ட கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் ஸ்பீடு டெமோன் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி அண்ணா கூடைப்பந்து மைதானத்தில் தொடங்கியது. இரண்டு நாள் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் கூடைப்பந்து கிளப்களை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடத்தப்படும் போட்டியின் முதலாவதாக திருச்சி மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் அணி, ட்ரிபிள் ஐ அணியை 59 - 47 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பாய்லர் பிளாண்ட் கூடைப்பந்து அணி, தண்டர் ஹால்க்ஸ் அணியை 66 - 60 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. போட்டியை ஏராளமானோர் பார்வையிட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.