உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஆட்டம் கண்டது உயர் மின் கோபுரங்கள் | Kaveri | Kollidam | Trichy | Checkdam

ஆட்டம் கண்டது உயர் மின் கோபுரங்கள் | Kaveri | Kollidam | Trichy | Checkdam

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படும் போது நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க பாலத்திற்கு அருகே தடுப்பணை கட்டப்பட்டது. மொத்தம் 850 மீட்டர் நீளம் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 60,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரோட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் புதிய தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நீரோட்டம் அதிகரித்து தற்போது தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வெள்ளப்பெருக்கு குறைந்த பின்பே தடுப்பணை எவ்வளவு துாரத்திற்கு சேதமடைந்தது என்பது முழுமையாக தெரியவரும். இந்த தடுப்பணை அருகில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரீட் துாண்களும் வெள்ளத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல் சாய்ந்தது. மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பை துண்டித்து மின் கசிவு பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்தனர். மின் கோபுரம் சாயாமல் இருப்பதற்கு இரும்பு கம்பிகள் கட்டி அதனை வலுப்படுத்தும் பணி இரவு முழுவதும் நடந்தது. கடைசியில் தண்ணீர் வேகம் தாங்காமல் மின் கோபுரம் தண்ணீரில் சாய்ந்து விழுந்தது. மற்றொரு மின்கோபுரமும் அதிகாலையில் கொள்ளிடம் ஆற்றில் விழுந்து மூழ்கியது. இதையடுத்து மற்ற மின்கோபுரங்களை காக்க என்ன செய்யலாம் என மின் ஊழியர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை