திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kovil kumbabishekam
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் பழமை வாய்ந்த மிருககண்டேஸ்வரர், மார்கண்டேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று 30 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. தருமபுர ஆதீனம் முன்னிலையில் கோயில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. திரளானபக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். Breath Pdy திருச்சி மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் உள்ள திருபிரம்பிநாதர் கோயிலில் 300 ஆண்டுகளுக்குப் பின் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவுக்குப்பின் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஜூலை 01, 2024