உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / அமைச்சர் மகேஷ் தொகுதியில் நடக்குது கூத்து | Repair school building | What use of paint insect?

அமைச்சர் மகேஷ் தொகுதியில் நடக்குது கூத்து | Repair school building | What use of paint insect?

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பராமரிப்பு இன்றி பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து வருகிறது. மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்களின் சிமென்ட் காரைகள் மற்றும் கான்கிரிட் கம்பிகள் துார்ந்து வெளியில் தெரிகிறது. சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. பள்ளிக்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. இதற்காக பள்ளியில் அவசரம் அவசரமாக உயரம் குறைவான காம்பவுண்ட் சுவர்கள் கட்டப்பட்டன. அதேபோல் சிதிலமடைந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் வெள்ளை அடிக்கப்பட்டது. அமைச்சர் வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் பெயின்ட் அடிக்கும் பணிகள் நிறைவு பெற்றன. சிறிது நேரம் அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. அவசர கதியில் மக்கள் வரிப்பணம் பல லட்சம் ரூபாயை அள்ளி தெளித்ததற்கு பதிலாக பழுதான கட்டிடங்களை புனரமைத்திருந்தால் மாணவர்கள் பயனடைந்திருப்பர் என சமூக ஆர்வலர்கள் குமுறினர். அச்சத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்து பாடம் படித்து வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பழுதான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் மற்றும் பெற்றோர் வலியுறுத்தினர்.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை