உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் | sports | Trichy

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் | sports | Trichy

தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் சார்பில் 5வது தென்னிந்திய அளவிலான சப் ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி கேகே நகர் சாய்ஜி ரோல்பால் அகாடமி மைதானத்தில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. ஆடவர் மற்றும் மகளிர் என தனித்தனியே போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழக அணி - ஆந்திரா அணியை 5 - 4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. மகளிர் பிரிவில் தமிழக அணி - கர்நாடக அணியை 6 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுதொகை வழங்கப்பட்டது.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை