திருச்சி SRM கல்வி குழுமத்தின் 'INNOVA FEST 24' கண்காட்சி | SRM Group | INNOVA FEST 24 Exhibition
திருச்சி எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் சார்பாக புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தும் INNOVA FEST 24 என்ற கண்காட்சி கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ராமாபுரம் மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் டாக்டர் சிவக்குமார், இணைத் தலைவர் நிரஞ்சன் துவக்கி வைத்தனர். எஸ்.ஆர்.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் ஜெகதீஷ் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மின் காந்தவியல் மைய துணை இயக்குனர் விஞ்ஞானி பாலகிருஷ்ணன் இஸ்லாவத் மற்றும் மேம்பாட்டுக் கணினி மையத்தின் இணை இயக்குனர் விமல் லக்ஷமன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஜெட்லி உலக சாதனைக்காக மாணவ, மாணவர்களின் 333 புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றன. இக்கண்காட்சியை 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 10,000 மாணவ, மாணவிகள் பார்வையிட்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைமை இயக்குனர் சேதுராமன், இயக்குனர் மால்முருகன், துணை இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியின் இறுதியில் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்ரட் சிவக்குமாரிடம் ஜெட்லி உலக சாதனை பதக்கம் மற்றும் விருது வனழங்கப்பட்டது.