உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / இருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது | Student sexually harassed | Trichy

இருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது | Student sexually harassed | Trichy

இருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது / Trichy / Student sexually harassed திருச்சி மாவட்டம் சமயபுரம் புறத்தாக்குடியில் தனியார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்திலேயே பள்ளி விடுதியும் செயல்படுகிறது. இங்கு 110 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் கும்பகோணம் அய்யாவாடியை சேர்ந்த பாதிரியார் குழந்தைநாதன் வார்டனாக உள்ளார். குழந்தை நாதனின் நண்பர் சுந்தர்ராஜன். இவர் திருச்சியில் தங்கி பாதிரியாருக்கான மேற்படிப்பு படிக்கிறார். விடுமுறை நாட்களில் விடுதிக்கு வரும் சுந்தர்ராஜன் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. மாணவர்கள் குழந்தைநாதனிடம் புகார் கூறியும் பயனில்லை என்பதால் மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். சுந்தர்ராஜன் மீது பெற்றோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தியிடம் புகார் கூறினர். தொடர்ந்து ராகுல் காந்தி மாணவர்களிடம் விசாரித்தார். இதில் மாணவர்களுக்கு சுந்தர்ராஜன் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் ராகுல் காந்தி புகார் கூறினார். விடுதி வார்டன் குழந்தைநாதன், அவரது நண்பர் சுந்தர்ராஜன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை